காவியமானவள் -11

காலை ஐந்து மணி தினம் தோறும் தவறாமல் ஒலிக்கும் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருந்தது...
அதனூடே இரவு ஆனந்த் ஆயத்தப்படுத்தி வைத்திருந்த கடிகாரமும் ஒலி எழுப்ப தூக்கம் கலைத்து எழுந்தான் ஆனந்த்,
மெல்ல கடிகார ஒலியை செயலிளக்கச் செய்து சமக்காளங்களை மடித்து ஒழுங்குபடுத்தி விட்டு அறையிலிருந்து வெளியேறி அம்மாவை அழைத்தவாறே சமையளறை நெருங்கினான்...
தான் பிறந்தது முதல் அம்மா அதிகம் உலாத்தும் இடம் சமையளறையே என நன்கு அறிந்தவன்,தனது குரலிற்க்கு பதில் இல்லையென கண்களை துடைத்தவாறே முன்னேறினான் அம்மாவை அங்கு காணவில்லை
எங்கு போயிருப்பாங்க இந்த நேரத்துல என சிந்தித்தவாறே அப்பாவின் அறை நோக்களானான் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் குடும்பத்திற்க்காக சளிக்காமல் உழைப்பவர் தூக்கத்தை களைக்க வேண்டாமென நினைத்திருப்பானோ என்னவோ எழுப்பாமல் விட்டு முகம் அழும்பி அம்மாவிற்க்காக காத்துக்கொண்டிருந்தான்,
தமிழின் நியாபக அலைகள் மனதோரம் ததும்பத் துவங்கின
பால் வாங்கற சாக்கு போக்க சொல்லி தினம் தினம் பார்க்க போவோம் அம்மாவ காணோமே ஒரு வேலை நேரமா கிளம்பரதா சொல்லிருந்ததால பால் வாங்க அவங்களே கடைக்கு போயிருப்பாங்களோ என எண்ணியவாறே எழுந்து தனது மிதி வண்டியை மிதிக்கத்துவங்கினான்...
தமிழை பற்றிய நியாபகங்களும் அவளை பிரியப்போகும் தருணத்தையும் எண்ணி தளர்ந்து போனான் கால்களின் வேகம் அதிகரித்தது அதிகாலை வெளிட்சமே அழகுதான் அந்த அழகை இரசித்தவாறை மனதிற்க்கு பிடித்த மங்கையை இரசிப்பது அடடா!சொல்லி வார்த்தை இல்லை சொக்கிவிடத் தோன்றும்,தெருக்களில் மின்விளக்குகள் ஒளிவீசிக்கொண்டிருந்தன,
தமிழ் வீட்டின் அருகில் அமைந்திருந்த சோடியம் விளக்கு மட்டும் மின்னிவாறு மஞ்சள் ஒளியை கக்கிக்கொண்டிருந்தது
உடல் ரோமங்கள் சிலிர்க்க மேக மகள் மழையை தூவினாள் இதமான தூறல் தமிழ் வீட்டை நெருங்கினான் ஆனந்த்,
தமிழை வாசலில் காணவில்லை அவள் முந்தின நாள் அலங்கரித்து பாதி அழிந்தும் அழியாமலும் வாசலை நிரப்பியிருந்த கோலம் கேளியாய் உவகைப்பதாக
ஓர் பிரம்மையை உணர்ந்தான் ஆனந்த் அதை கடந்து
வாயிற்க்கதவை நெருங்கினான் பதபதப்போடு தட்ட முற்ப்பட்டான் காதலனின் மனஅலையின் வேகமதை உணர்ந்திருப்பாளோ என்னவோ முற்ப்பட்டு கதவை திறந்தாள் தமிழ்...
ஓ!வாடா என்ன காலைல வீட்டுக்கே வந்திருக்க ஹாஸ்டல் போரதா சொல்லிருந்தயே இன்னும் கிளம்பளயா என அடுக்கினாள் கேள்விகளை...
இனிமே தான் கிளம்பனும் தமிழ்
எழுந்து பார்த்தேன் அம்மாவ காணோம் கடைக்கு போயிருப்பாங்க போல அதான் அப்டியே பார்த்திட்டு போலாம்னு வந்தேன் என தமிழையும் சேர்த்து பார்க்க வந்ததை மறைத்தான்...அப்டினா என்ன பார்க்க வரல நான் தான் ஹாஸ்டல் போர பயனாச்சே ஆசையா பார்க்க வந்திருப்பனு நினச்சேன் சரி விடு ,
லூசு அப்டிலாம் இல்லடீ உன்னை பார்க்கனும்னு தான் முக்கியமா வந்தேன்,
சரிடா நம்பிட்டேன்...
மழை பேயுது போல காலைலயே நல்லா சிலுசிலுனு இருக்குடா...
அதான் கோலம் கூட போடல..
ஆமா டீ தூறல்ல நனைஞ்சராத உடம்பு சரியில்லாம போயிட போகுது...
பாருடா என் மேல அக்கரைலாம் இருக்கா,
இருக்காதா செல்லம் நீ என் வருங்கால மனைவி உன் மேல அக்கரையா இல்லாம யார்மேல இருக்க சொல்ர...
உஸ் அப்பா ஃபுல் அரிக்குது போதும்டா
நேரமாகுது நீ கிளம்பு என வழியனுப்ப விளைந்தாள் அதற்க்குள் முற்ப்பட்டாள் தமிழ் அன்னை என்ன டா இன்னைக்கு கிளம்பரையாமாம் பாத்து போய்டு வா நல்லா தேர்வு எழுதிட்டு வா என வாழ்த்து சொல்லி வழியனுப்பி வைத்தனர் இருவரும்...
அதே தோய்வுடன் வீட்டை அடைந்தான் ஆனந்த்,
அம்மா சமயலறையில் இருப்பதை அறிந்து அழைத்தவாறே உள் நுளைந்தான்
எங்கடா போன எழுந்தவுடனே, கடைக்க போயிட்டு வந்து பார்க்கறேன் ஆள கானோம்,
இல்லமா உன்ன தேடிட்டுதான் கடைக்கு வந்தேன் தமிழ வீட்டுல பார்த்தேன் நேரமாகிடுச்சு சரி வீட்டுக்கு வந்திருப்பனு திரும்பி வந்துட்டேன்,டீ போட்டுட்டயா சாப்ட்டு குளிச்சுட்டு கிளம்பரேன் அப்பா வாக்கிங் போய்ட்டு இன்னும் வரலயா?வந்த உடனே பஸ் ஸ்டாண்ட்ல கொண்டு வந்துவிட சொல்லு என பேசிக்கொண்டே தேனீரைப் பருகி குளிக்கச் சென்றான்...
குளித்து முடித்து கிளம்பியபோது மணி ஆறானது வாக்கிங் போனவரும் வந்து ஆயத்தமானார் வழியனுப்ப..
சரிம்மா போய்ட்டு வரேன் எனச் சொல்கையில் கொடி தன் கையில் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் தாளை கையில் கொடுத்தாள் அதை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டு வாங்க அப்பா போலாம் வெளியேறினான் ஆனந்த்...சேகர் இருசக்கர வாகனத்தை இயக்க பயணித்தனர் பேருந்து நிலையம் நோக்கி...
அன்னா சிலை அருகில் தயாராக நின்று கொண்டிருந்தது கல்லூரி பேருந்து,சரிங்கப்பா பஸ் நிக்கிது கிளம்பரேன் என வாகனத்தில் இருந்த கைப்பையை எடுக்க முனைந்தான் ஆனந்த்,
பனம் போதுமாடா வேணும்னா சொல்லு கொடுத்தணுப்றேன் என கேட்க இல்லப்பா போதும் பதினைந்து நாள் தான பார்த்துக்கறேன் என பதிலுரைத்து பேருந்து ஏறினான்...மேல் ஏறி கை அசைக்கும் வரை மகனை பார்த்துக்கொண்டிருந்த சேகர் கிளம்பினார்...
மாணவர்கள் ஒவ்வொருவராக பேருந்தில் ஏறிய வண்ணம் இருந்தனர்...
ஆனந்த் நண்பன் கதிர் மற்றும் மணி இருவரும் வருவதைக கண்ட ஆனந்த் மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் இடம் பிடித்து அமர்ந்தான்...
வா மச்சான் நீயும் இப்பதான் வரையா?போயிருப்பனுல இருந்தேன் எப்டி போச்சு ஸ்டெடி லீவுலாம் படிச்சயா என்றான் கதிர் நீ என்னடா பண்ணுன என எதிர்கேள்வி எழுப்பினான் ஆனந்த் நல்லா சாப்ட்டு தூங்குனேன்டா என்று கதிர் பதிலுரைக்க இங்கயும் அதே நிலமைதான் ஒன்னும் படிக்கல பாத்துக்கலாம் வா என்க மணி அவனெல்லாம் டாப்பர் மச்சி நாமதான் டல் என கேளி செய்ய ஆமடா டாப்பர்தான் எம்பது சதவீதம் எடுத்தனா போன தேர்வுல பார்க்கலாம் நீயா நானானு என பேசியவாறு புத்தகத்தை எடுத்தான் ஆனந்த்...
பார்த்தியாடா பஸ்ல கூட படிக்கிறான் என மீண்டும் ஓட்ட
பஸ் போகும் போது படிக்க கூடாதுடா அப்டி படிச்சாலும் நியாபகம் இருக்காதுனு ஒரு ஆய்வு சொல்லுதாம் மூடி வெய்டா போய் பார்த்துக்களாம் என பிடுங்கி உள் நுழைத்தான் மணி...
பேருந்து கிளம்பியது அரட்டை நீண்டது...
-காவியமாவாள்

எழுதியவர் : நாமக்கல் கிருபானந்.கு (18-Jul-15, 7:45 am)
சேர்த்தது : கிருபானந்த்
பார்வை : 361

மேலே