அரளி
ஏழே தம்பி சிட்டு பேரா...
இந்த பக்கம் ஏன் மக கெண்டும் போனளா பா...
ஓடையில கிடரி மேச்சுட்டு இருந்த என்ன அவங்க கேட்டாங்க...
ஆனா அவகள எனக்கு தெரியாது..
ஆமா அப்பாதையே ஒரு அக்கா அழுதுகிட்டே போச்சு..
ஐய்யயோ என்ன சொன்னாலும் கேக்கமாட்ராளே பாதகத்தி...
அந்த வீனா போன பயதேன் வேணும்ன்னு
அடம் பிடிச்சிக்கிட்டு இப்போ அரளிவித பெறக்க போய்டாளே....
கொட்டத்துல கிடரிய கட்டிகிட்டே பாட்டிட கேட்டேன் பாட்டி அரளிவிதனா என்னது பாட்டி....
என்ன ராசா சொல்டர
அதகெண்டும் தொட்டுராத அது விஷ காய் ராசா...
நாளைக்கு நாம வரப்புல மேச்சா போதும் ஓட பக்கம் போக வேணாம் சாமி...
காலைல பள்ளிகொடத்துக்கு போகும் போது தான் பாத்தேன்...
தெருவுல கூட்டமா இருஞ்சு..
பந்தல் போட்டு இருந்தாக...
இழவு வீடு போல...
நேத்து ஒரு அக்காவ தேடி வந்தாகல..
அவக மட்டும் நெஞ்சுல அடிச்சு .. அடிச்சு அழுதுட்டு இருந்தாக...
ஏன் பச்சகிளி ஒன்னு
தேசம் சொல்லாம பறந்துடுச்சே....
ஏன் பொன்னே....
இச்சி பழம் போல இனிக்க சொல்லுவாளே.... மம்ம் ஏன் ஆத்தா...
பச்ச வாழ மரம் கண்ணு பட்டு பட்டுபோச்சே......
ஏன் ஒத்த ஆலமரம் இடி விழுந்து கருகிடுச்சே....
ஒங்க அப்பன் சொன்ன என்ன...
இந்த ஊரு சொன்ன என்ன....
உன் ஆத்தா நான் இருக்கேன்னு படிச்சு சொன்னேனே..
ஏன் பச்ச மண்ண இந்த மண்ணு திங்க போகுதடி.....
ஏன் ஆத்தா...
எனக்கு தெரியாமலே கண்ணீர் வந்துடுச்சு...
ஏழே வாட மூணாம் பெல் அடிக்க போது...
கொஞ்ச தூரம் கடந்த பிறகு எல்லாம் மறந்திட்டு பள்ளிகொடத்துக்கு போய்டாம்...
ஒரு நா அப்டிதேன் செல்வம் சித்தப்பா..
அரளி விதையை தின்டுருச்சுன்னு ..
புளிய மரத்துகிட்ட சித்தப்பாவ தூக்கிட்டு வந்தாக...
சித்தப்பா துள்ளுச்சு,
கத்துச்சு ...
வயிறு வலிக்குது மாமா ன்னு சுருட்ட மாமா வ புடிச்சு அழுதுச்சு...
டவுன் பஸ் வரவும்
ஏத்திகிட்டு தேனி பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனாக...
சித்தப்பா செத்து போய்டாருன்னு...
கொண்டு வந்துட்டாக...
இரண்டு நா கழிச்சு..
பேச்சி அக்கா வும் அரளி விதையை தின்டுபுட்டு செத்து போச்சாம்...
அது சித்தப்பா பேர நெஞ்சுல பச்ச குத்தி வச்சு இருந்துசாம்....
எனக்கு இதெல்லாம் எதுக்குன்னு அப்ப தெரியல புள்ள...
கிழுவ முள்ளுல உன் பேர என் நெஞ்சுல எழுதிட்டு வந்தேனே...
அப்போலாம் வலிக்கல புள்ள...
நீ இப்ப சொன்ன வார்த்தை வலிக்குது புள்ள...
ஏன் சித்தபாவும் , பேச்சி அக்காவும்..., பெயர் தெரியாத இன்னெரு அக்கா வும்...
எதுக்கு அரளிவித தின்னாகனு அப்போ தெரியல புள்ள...
இப்போ நானும் போரேன் ஓட பக்கமா....
தேடி யாரும் வரமாட்டாக...
நீயும் தான்...
கல்யாணம் பண்ணி அசுலூரு போய்டீல...
நானும் போரேன் புள்ள பெரிய ஊருக்கு....
மஞ்சள் நிலா 🌙