கலகங்கள் கலவரமாகிறது

பூமியில்
சிங்கமும் புலியும் யானையும்
தத்தம் இனமாய் காலமாய் வாழ்ந்தும்
மனிதன் மட்டும் மாறுபட்ட மார்கத்தில் .............

இருக்கின்ற மனித கூட்டத்தில் மட்டும்
எத்தனையோ பேதங்கள்
மதம் , ஜாதி , மொழி , இனம் , நிறம் என்று ...........

மனிதநேயத்தை வளர்க்கவேண்டிய
மனித இனம்-மாற்றாக
மரணக்கொள்கைகளை அல்லவா
போதித்து கொண்டிருக்கிறது ...........

சுற்றமும் நட்புமாய் இருக்கவேண்டிய
சமூக சூழல்
சுடுகாடாய் அல்லவே
மாறிக்கொண்டு இருக்கிறது ..........

மாறி மாறி அடங்கும் வஞ்சக பசிக்கு
மாற்றுவழி தெரிந்தும்
மார்க்க மயக்கத்தில் மக்கள் .........

தீவிரவாதம் தேடும் உயிர் தேடல்களுக்கு
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில்
பலி பீடங்கள் ............

மோதலும் சாதலும்
வெற்றி என்று வெற்று வீரம் கொள்ளும்
மனித இனத்திற்கு
வேதனை நிரந்தரமே ..............

ஈக்களின் ஒற்றுமையில் செழித்து தொங்குகிறது
எத்தனையோ தேன்கூடுகள் ,
இருந்தும் , காலத்தின் பார்வையில்
சுயநலம் பெருகிவிட அதையும் கலைத்து
தினமும் நடக்கிறது ஆனந்த சுயநல பருகல் .........

சமூக சிந்தனையோடு

கவிஞர் சுந்தர வினாயகமுருகன்

எழுதியவர் : வினாயகமுருகன் (18-Jul-15, 8:24 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 42

மேலே