எல்லோரும் அறிவீரே

எழுதுவதெல்லாம் கவிதையில்லை,
எழுதுபவரெல்லாம் கவிஞரில்லை,
எதுகையில்லை, மோனையில்லை,
எல்லோரும் கவிஞரில்லை, அறிவீரே;

ஒரு வரியில் இரு வரியில்
பிதற்றல் மட்டுமே;
காதல் பிதற்றல் மட்டுமே,
சோகப் பிதற்றல் மட்டுமே;

எந்த செய்தியுமில்லை,
ஏற்றமான கருத்துமில்லை,
அறிவைத் தரும் நோக்கமில்லை,
சிந்தனைக்கும் இடமேயில்லை.

எனவே,
எழுதுவதெல்லாம் கவிதையில்லை,
எழுதுபவரெல்லாம் கவிஞரில்லை,
எல்லோரும் அறிவீரே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-15, 10:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

மேலே