தமிழச்சி

குழந்தையின் சிரிப்பொலி
குதூகலமூட்டும் சிம்பொனி

தாயை நேசிப்பவர்
தமிழையும் நேசிப்பார்


தலைக்கவசம் அணியுங்கள்
தலையில் கேசம் இல்லை என்பதை மறைப்பதற்காவது

மின்னல் பறவையை மிதமாக ஓட்டுங்கள்
இல்லையேல் இன்னல் பறவை ஒன்று இடித்துவிட கூடும்

முந்தி செல்பவரே நீங்கள் முயலும் இல்லை
பிந்தி வரும் நான் ஆமையும் இல்லை

தாய்க்குப் பின் தாரம் மூன்றாவது ?
நடக்கும் சூரசம்காரம்

கனவை நனவாகும் முதல் முயற்சி
கலைப்பது தூக்கத்தை


வழிவிட்டு ஒதுங்குங்கள்
வருவது சூறாவளியின் சொந்தக்காரன்

எழுதியவர் : (20-Jul-15, 4:25 pm)
பார்வை : 131

மேலே