பூத்தது வைகறை வானம்

பொன்னெழில் பொங்கிடும் காலை
***பூங்குயில் மீட்டிடும் ராகம் !
தென்னையில் பைங்கிளி கத்தும்
***தேன்குரல் கொண்டது பேசும் !
சென்னியில் கொண்டையுங் கொண்ட
***சேவலுங் கூவிடும் வேளை !
கொன்றையின் செந்நிறப் பூக்கள்
***கொட்டியே பாதையை மூடும் !

அன்னமும் தன்னிணை யோடு,
***அன்புடன் நீரினில் நீந்தும் !
தென்றலும் மெல்லென வீசத்
***தேகமும் சில்லெனக் கூசும்
கன்னலின் இன்சுவை வெல்லும்
***கன்னியின் பாட்டினில் உள்ளம் !
புன்னகை சிந்திடும் கோலம்
***பூத்தது வைகறை வானம் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Jul-15, 11:33 pm)
பார்வை : 421

மேலே