ஏக பாத அந்தாதி-காப்பு செய்யுள்
மானை ஏத்து மானை ஏத்து
மானை ஏத்து மானை ஏத்து
மானை ஏத்து மானை ஏத்து
மானை ஏத்து மானை ஏத்து
பொருள்;மானை ஏத்தும் என்பதை ஏந்தும் என்று பொருள் கொள்க மேலும் ஆ+னே ஏத்தும் ஆன்+ஏ எருதே ஏந்தும் பெருமானை ஏத்துதற்கு, ஆனையாகிய கஜேந்திரன் ஏத்தும்( போற்றும்) கண்ண பெருமானே போற்றும் லலிதா ஸகஸ்ர நாமத்தில் மா(தா)னே ஏத்தும் சக்தியாகிய மானை மடியிலே ஏத்தியிருக்கின்ற சக்தி கணபதியாகிய விநாயக பெருமானை ஏத்து(போற்று)