தென்றல் தீண்டா மலர்
வரன் பெயர் வீரமணி
வரதட்சணை பெற்றால் செல்வமணி
கோஹினூர் வைரமணி
கோலார் தங்கமணி
காத்திருக்கும் கனகமணி
கழுத்தில் மட்டும் கருகமணி
பூவழகோ பொன்னுமணி
பூத்திருக்கும் கண்ணின்மணி
மாறன் தழுவவில்லைஎன்றல்
மரணம் தழுவ குன்றிமணி!