உயிர்ப்போடு இருந்த நேரங்கள்

இப்படியே
செத்துவிடலாமா என
மார்பில் சாய்ந்து நீ
பட்டையான நகங்களால்
வருடிக்கொண்டிருக்க
இப்படியே வாழலாம் என
சொல்லிமுடிக்கும் முன்
அடுத்த வார்த்தைகளை
தின்றுக்கொண்டிருக்கும்
உன் முத்தம்..

என்னால முடியாது
உடனே விவாகரத்து என நான்
நம் பிள்ளையிடம் ஆவலாதி கூற
புன்னகைக்கோட்டில்
சினம் கொன்று போய் விளையாடென
குழந்தையை அனுப்பும் உன்
முறைப்பு கலந்த வெட்கத்தில்
தயாராகியிருக்கலாம் ஒரு
முத்தம்..

வார இறுதியில்
கோயிலுக்கு சென்றிருக்க
சீக்கிரம் வீட்டுக்கு போலாமென
உன்னை சொல்ல வைத்திருக்கும்
அதோ அச்சிலைகளின்
பிரியாதொரு முத்தம்..

இரண்டு நாட்கள் விடுமுறையென
சொல்லிக்கொண்டே வந்து உன் முகமேந்துகையில்
மூன்று விரல்களை நீ காண்பிக்க
கன்னம் வருடும் என் விரல் பிடித்து
மன்னிப்பு கேட்டது போல் தோன்றும்
நெற்றியில் உன் முத்தம்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (23-Jul-15, 6:10 pm)
பார்வை : 88

மேலே