இருக்கும் இடத்தில் இருப்பது இருந்தால் எதுவும் நடப்பதில்லை

அலட்சியம் இருக்குமிடத்தில்
இலட்சியம் இருப்பதில்லை

விட்டுக்கொடுப்பு இருக்குமிடத்தில்
பிடிவாதாம் இருப்பதில்லை

பொறுமை இருக்குமிடத்தில்
கோபம் இருப்பதில்லை

பொறுப்பு இருக்குமிடத்தில்
வீண்விரையம் இருப்பதில்லை

தைரியம் இருக்குமிடத்தில்
பயம் இருப்பதில்லை

இருக்கும் இடத்தில் இருப்பது இருந்தால்
எதுவும் நடப்பதில்லை

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (25-Jul-15, 3:26 pm)
பார்வை : 245

மேலே