முக்கோணக் காதல்

அகோர விபத்து!!!
அர்ஜுனனும் அகிலாவும் சிதறி விழுந்தனர்.
அப்பளமான கார் மரத்தோடு அப்பிக் கிடந்தது.

கார் ஒட்டிய கிருஷ்ணனும்,
அருகில் இருந்த மனைவி வேணியும்
ஆகாசத்தை வெறித்தபடி சவமாகி இருந்தனர்.

எங்கோ இருந்து ஒரு கூட்டம்
ஓடிவந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்
பாச மலர்களை அள்ளியெடுத்து,
ஆஸ்பத்திரி அடைந்தனர்.

இன்றோடு இவர்கள் உயிர்தெழுந்து
பதினைந்தாண்டுகள் ஆகிறது.

அனாதையாய் போன இவர்களுக்கு
எத்தனையோ கஷ்டங்கள்.

அர்ஜுனன் அல்லும் பகலும்
உழைத்து ஓடாய் தேய்ந்து
தன் கண் இமைக்குள் காத்து
வளர்த்தான் ஆசை தங்கை
அகிலாவை.

அகிலா கேட்டு விட்டாளோ,
அதை தருவிப்பதே லட்சியமாய்
திரிவான்.

பாசமான பாசம்.
அர்ஜுனன் தன் படிப்பை
தாரை வார்த்து கூலி வேலை செய்து
அகிலாவை படிக்க வைத்தான்.

அன்னை தந்தை இல்லாக் குறை
ஒரு போதும் அண்ட விடாமல்
அடை காத்தான்.

தனக்கென்ன வேண்டும் என்று
அறிந்து கொள்ளாமல் தங்கையே
தன் உலகமென்று உயிர் வாழ்ந்தான்.

பட்டப் படிப்பு முடித்திருந்த
அகிலா ஒரு சிறிய அலுவலகத்தில்
கணக்காயறாய் வேலை செய்தாள்.

அண்ணனோ ஒரு டைலர்
கடையில் பிரதான தையல் காரன்.

தெருவே இவர்களை துரதிஷ்ட
குடும்பம் என்று முத்திரை குத்தி
ஒதிக்கி இருந்தது.

விபத்து நடந்தபோது
அர்ஜுனனுக்கு பனிரெண்டு வயது
அகிலாவிற்கு சுமார் பத்திருக்கும்.

அன்று முதல் அர்ஜுனன்
பயந்தவனாகி விட்டான்.
இரவில் திடீரென கத்துவது,
அகிலா தொட்டால் கூட தயங்கி
நகர்வதென்று சற்று அந்நியமாய் போனான்.
மாறாக அகிலாவோ தைரிய சிகாமணி போல்.
எங்கும் திரிவாள்.

தஞ்சாவூரில் இருந்த வந்த ஒரு குடும்பம்,
போன வருடம் எதிர் வீட்டில்
குடி வந்தனர்.

இந்த ஒரு வருட காலமாய்
அர்ஜுனன் வீட்டில் சிரிப்பும்
பூரிப்பும் சற்று தூக்கலாய்
இருந்தது.

காரணம் எதிர் வீட்டு விக்ரம்.
துரு துரு பேர்வழி.
முற்போக்கு சிந்தனைவாதி.
கள்ளம் கபடம் தெரியாத
குணாளன்.

விக்ரமின் அக்கா அபிராமியும்
அப்படித்தான்.
அர்ஜுனன் குடும்பத்தின் மீது
அலாதி அக்கறை செலுத்துவாள்.

அர்ஜுனனும் இவர்கள் இருவரையும்
பார்த்துவிட்டால் குஷியாகி விடுவான்.
குறிப்பாக விக்ரமிடம் மணிகணக்கில்
பேசுவான்.

சில நேரங்களில் சிறு பிள்ளைகள்
போல தரையில் கட்டி உருண்ட படி
விளையாடுவர்.

அர்ஜுனின் அறையில்
இரவு பகலரியாமல் இருவரும் பேசி ,
பாடி, ஆடி கூத்து கட்டுவார்கள்.

அகிலாவும் விக்ரமின் அக்காவும்
நல்ல தோழிகளாய் வலம் வந்தனர்.

அர்ஜுனன் மட்டும் அபிராமியை
பார்த்தாலே வெட்க்கப் படி ஓடி
விடுவான்.

அபிராமியும் அண்ணனை நன்கு
நய்யாண்டி செய்வாள்.

இப்படி இருக்க....
ஒரு நாள் நல்ல மழை பெய்கையில்
அந்தி சாயும் வேலையில்,
அர்ஜுனன் வரவுக்காக வெளிக்
கதவை பூட்டாமல் தாளிட்டு இருந்தாள் அகிலா.
திடீர் மின் வெட்டு.

எதையும் அறியாமல்
இழுத்து போர்த்தியபடி தூங்கி கொண்டிருந்தாள்.
மாலை நேரத் தூக்கம்,
குளிர் காற்று,
மண் வாசனை,
மழைத் துளி விழும் சத்தம்,
அகிலாவை வேறு உலகத்திருக்கு
இட்டு சென்றிருந்தது.

ரம்ம்யமான சூழலில்
மனம் ஏதோ கனவில்
தேடியபடி இருந்தது.
தேடிக் களைத்த மனம்
இன்ப வலி பூண்டு இன்புற்றிருந்தது.

திடீரென கண் விழித்தாள்,
அறையெங்கும் அகல் வெளிச்சம்,
படுக்கை யருகில் விளக்கோடு விக்ரம்,
புன்னகை பூத்தபடி நின்றிருந்தான்.

இன்ப அதிர்ச்சி.
அந்தக் கணமே இவளின் மனதை
களவாடி விட்டான் இந்தக் கள்வனென
தோன்றிற்று அகிலாவிற்கு.

பட்டாம்பூசிகள் பட படவென
பறக்கிறது. உதடுகள் தவிக்கிறது.
உடலும் நடுக்கண்டு நானுகிறது.

இவையனைத்தையும் விக்ரம் பார்த்தும்
பார்காதவனாய் சிலைபோல் நின்றவன்,
பேசலானான்....

அகிலா, நீ வீட்டில் இருப்பதை
நான் அறியேன். அர்ஜுனன் வந்திருப்பான்,
மின் வெட்டு கண்டு பயந்திருபானென்று
அகல் கொண்டு வந்தேனென்று கூறி முடித்தான்.

நல்லா சமாளிக்கிறீங்க என்று
செல்லமாக கடிந்து விட்டு நகர்ந்தாள்.

அகலை வைத்தவன்,
குடு குடுவென்று ஓடினான்.
அவன் ஓடும் அழகை இருட்டிலும்
மெய்கொட்டாமல் பார்த்து ரசித்தாள்.

அன்று முதல்,
அகிலா விக்ரமை தீவரமாய்
திருஷ்டிக்கலானாள் .

காலம் செல்லச் செல்ல,
காதலை மூடிவைக்க
முடியாமல் மன்றாடினாள்.

இருக்கும் தைரியத்தை கூட்டிக்
கொண்டு இந்த காதல் விசயத்தை
விக்ரமிடம் முறையாய் விண்ணபிப்பதற்கு முன்,
அர்ஜுனனிடம் கூறிவிட முடிவெடுத்தாள்.

ஒரு ஞாயிறு அன்று,
அர்ஜுனனை அழைத்தாள்.

என்றுமில்லாத ஒரு நடுக்கம்.
தயங்கி தயங்கி

அண்ணா! அண்ணா!! என்றபடி,
இது வரைக்கும் நான் கேட்டதெல்லாம்
வாங்கி கொடுத்த...,
நல்ல படிய பார்த்துகிட்ட,
இப்போ நான் வளர்ந்து ஆளாகிவிட்டேன்,
என் வாழ்க்கையை நானே தெரிவு செய்ய
துனுச்சல் இருந்தாலும்,
நீ தான் என் அம்மா, அப்பா எல்லாமே....
அதனால என் வாழ்க்கை துணையை
நீயே எனக்கு அமைச்சு கொடுக்கணும் என்றாள்.

இதை கேட்ட அர்ஜுனன்,
அலாதி சந்தோசப் பட்டு
புரிந்து விட்டவனாய்...
யாரை காதலிக்கிறாய் ?
என்று அகிலாவின் கன்னத்தை இரு கையிலேந்தி
கேட்டான்.

முதல் முறை அகிலா
வெட்க்கபட்டபடி கண்கள் இறுக
மூடிக்கொண்டு.......
விக்ரம் தான் என்றாள்!!!

சடாரென்று கோபம் கொப்பளித்து
திரும்பி விட்டு,
தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தான்.

அண்ணா என்னாச்சு ?
என்னாச்சு என்று விசும்பிகிறாள்.

முகத்தை கையால் மூடிக் கொண்டு,
உறைக்கலானான்.....

எனக்காக இதுவர எதுவுமே ஆசைப் பட்டதில்ல,
முதல் முறையா ஒரு அசை வந்திருக்கு...
உனக்காக எத்தனை எத்தனையோ
விட்டுக் கொடுத்திருக்கிறேன்....

இந்த முறை,
உன் அண்ணனுக்காக
விக்ரமை விட்டுக் கொடுத்து,
எங்கள் காதலை
சேர்த்து வைப்பையா அகிலா?
என்று கூறி .....ஒ வென்று அழ
ஆரம்பித்தான் அர்ஜுனன்..........!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (25-Jul-15, 10:03 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 465

மேலே