என்னவளை தொலைத்து விட்டேன்

என்னவளை தொலைத்து விட்டேன் .....

எனக்கே எனக்காய் என என்னோடு இருந்தவளை .....

எப்படி நான் தொலைத்து விட்டேன் ....

என்னவளே!

உன்னிடம் என் மனதை சொல்ல இருந்த தைரியம்

எப்படி இல்லாமல் போனது என்னை தந்தவரிடம் சொல்ல ....

நீ இன்றி ஒரு வாழ்வா. ?

நினைத்து கூட பார்க்க முடியவில்லையடி என்னால் ...

என் வாழ்க்கை பயணம்தனை .....

உன் கரம் பற்றி தானே தொடர்ந்திருந்தேன் இன்று வரை ....

இனியெப்படி நீ இல்லாமல் நான் மட்டும் நடந்து செல்வேன் ....

திக்கு தெரியாத காட்டிற்குள் திகைத்து நிற்கும்

மழலை போல துடிக்குதடி என் நெஞ்சம் ....

என் உயிரானவளே ...

உனை எப்படி தொலைத்தேன் நான் ... ......

இருபது வருடங்கள் நான் அறியா உலகம் தனை .....

அறிய செய்தவள் நீதானடி .... என் உயிரே !....

இப்படி தன்னந்தனியாய் தவிப்பதை காட்டிலும்

உன் மடியில் செத்து தொலைத்தாலும் இன்பமடி ...

என்றாலும் என்னவளே ....

சாக துணியவும் மனமில்லை ..... ஒருவேளை

செத்து போனால் எப்படி உனை நான் காண்பேன்

என எண்ணி

சாக துணியவும் மனமில்லை ...... நீயின்றி

வாழ்ந்திடவும் மனமில்லை ..... என் செய்வேன் ?

என்னவளே ...

எப்படி தொலைத்தேன் உன்னை நான் ....? - நீ இன்றி

திக்கு தெரியாத காட்டிற்குள் திகைத்து நிற்கும்

மழலை போல துடிக்குதடி என் நெஞ்சம் ....


....

எழுதியவர் : கலைச்சரண் ...... (26-Jul-15, 9:15 am)
சேர்த்தது : esaran
பார்வை : 69

மேலே