நூலகம்

அறிவின் அகன்ற வாசல்
நூலகம்
ஆறறிவு விரல்கள் புரட்டிப் பார்க்கும்
எண்ணங்களின் பக்கம்
சிந்தனைப் பூக்கள் சிரிக்கும்
அழகிய பூந்தோட்டம்
எழில் கற்பனைகள் அரங்கேறும்
இலக்கிய மன்றம்
உலகினை உனக்குக் காட்டும்
விரிந்த சாளரம்
இதயத்தை வானுக்கு உயர்த்தும்
ராக்கெட் தளம் !
----கவின் சாரலன்

கவிக் குறிப்பு : எழுத்தில் நான்காண்டுப் பயணத்தில் இத்துடன் கவிதைகள்
இரண்டாயிரம்.. இவ்வாறு எண்ணிக்கையில் ஓர் இலக்கை எட்டும் போது
நிறுத்திவிடலாம் என்று எண்ணுவதுண்டு .ஆயினும் தொடர்கிறேன்

கவிதை
எழுத் எழுத வரும் போதை
நான் ஏந்தி நிற்கும் மதுக் கிண்ணம் !
----என்று எழுதினேன். பார்ப்போம் .இங்கே மது விலக்கை அமுல் படுத்த
வேண்டும் என்று சொல்ல மாட்டீகள் என்று நினைக்கிறேன் .

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jul-15, 7:17 pm)
பார்வை : 199

மேலே