அப்துல் கலாமே நீயிருந்தாய் --- கண்ணீர் அஞ்சலி -- இரங்கற்ப்பா
உழைப்பில் உறுதி உடையவரே !
உன்னத உலகில் உயர்ந்தவரே !
உழைப்பை மட்டும் நிறுத்தாமல்
ஓயா துழைத்தாய் உலகினிலே .
சொல்லால் மட்டும் நில்லாமல்
செயலில் காட்டி நின்றாயே !
நீதி நேர்மை நின்வழியே !
நிகரில்லை உனக்கு மேதினியில் !
ஆக்கம் படைத்தாய் அறிவியலில் .
அகிலம் தன்னில் முதலிடத்தை
அன்னை பாரதம் அடைந்திடவே
அப்துல் கலாமே நீயிருந்தாய் .!
வேதனை மனத்தினில் மிகுந்திடுதே .
சாதனை பலவும் நீபடைத்தாய் .
சோதனை இதுதான் இவ்வுலகில் .
சோகமும் என்றும் நிலைதானோ .?
கண்ணில் நீரும் சொரிந்திடுதே .
விண்ணில் நீயும் விடிவெள்ளி .
மண்ணில் பிறந்தாய் எமைக்காக்க .
பண்ணில் நானும் போற்றுகின்றேன் .
சுரண்டும் வர்க்கம் தனைக்கண்டு
உறங்கிப் போனாய் நீயின்று .
வறண்ட நிலமாய் பாரதமே
மாறிப் போனதே ஏனின்று ????