இளமையின் இன்பத்தில் இன்றைய இளைஞன்

இளமையின் இன்பத்திலிக்கும் இளைஞனே!
இது மட்டும் தான் வாழ்க்கையா?

முகநூலில் மூழ்கிய நீ - உன்
முன்னேற்றத்தை முடக்கலாமா?
முன்பின் தெரியாத நட்புகளைத் தேடி
உன் முகவரியை தொலைக்கலாமா?

மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமையாகி - உன்
மரியாதையை இழந்து விடாதே!
புகைத்து புகைத்து உன் உடல்நலத்தை
பகைத்துக் கொள்ளாதே!

வாட்ஸ்அப்களில் வலம் வரும் நீ - உன்
வாழ்வை வளம் பெறச் செய்வது எப்போது?
தானாக வருவதில்லை தன்மானம் - அதை
நீயாக இழந்து வருந்தாதே!

விரும்பிய வாழ்வை வாழ - உன்னுள்
விதையை விதைக்க வேண்டாமா?
விளைநிலத்தை தரிசாக்கி - இப்படி
வீணடித்தல் தகுமோ?

பயிரிடும் காலத்தை விட்டு விட்டு
அறுவடை காலத்தில் வருந்தாதே!
இதுதான் தருணம் என அறிந்தும்
இன்னும் தயக்கம் கொள்வது சரிதானோ?

இத்தனை நாள் எப்படியோ? - இனி
அத்தனைக்கும் ஈடுகொடு.
விடிகின்ற பொழுது முதல் - உன்னால்
முடியும் என்று புறப்படு. ..............

எழுதியவர் : தங்க மணிகண்டன் (28-Jul-15, 7:32 pm)
பார்வை : 68

மேலே