காற்றே என் இனிய காற்றே
காற்றே உன் ஆற்றல்
புயலினில்
காற்றே உன் இனிமை
தென்றலில்
காற்றே உன் தழுவல்
பூம்பொழினில்
காற்றே உன் தொடல்
மலரிதழ்களில்
காற்றே உன் ஆடல்
மங்கையர் கூந்தலில்
காற்றே உன் வரம்
என் உயிர் மூச்சினில்
காற்றே உன்னுடன் கொண்டது
ஒரு நெடிய உறவு
காற்றே உன்னுடன் எனக்கு
ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்
காற்றே நீ வாழ்க
உன்னுடன் நான் வாழ்வேன்
வாழ்க்கையின் பக்கங்களை நீ திருப்ப
அதன் அர்த்துமுள்ள வரிகளை நான் எழுத...
-----கவின் சாரலன்