முத்தம்
முத்தம் முதல் முத்தம் -அது
அன்னை அள்ளித்
தந்த முத்தம் -அது
அன்பைக் குறிக்கும் முத்தம்
முத்தம் மறுமுத்தம் -அது
தந்தை தடவிக்
கொடுத்த முத்தம் -அது
பண்பைச் சொல்லும் முத்தம்
சிலமுத்தம் பல முத்தம்
சுற்றும் முற்றும் கிடைத்த-அது
சுதந்திரமாய் கிடைத்த முத்தம்
முத்தம் முத்தான முத்தம் -அது
பருவம் பதினாறில் பருவக்கன்னி பாதிக்கனவில் வந்து தந்த முத்தம்
இதழில் இனிக்கும் இனிக்கும் -அந்த
முத்தம்
இதமாய் இருக்கும் இருக்கும் -அந்த
முத்தம்
சிக்கான முத்தம்
காதல்கன்னி கொடுப்பாள்
கிக்கான முத்தம்
அவள் மனைவியாய்
வந்தாள் கொடுப்பாள்
முத்தம் முத்தம் -நீ
நித்தம் நித்தம் கொடுத்தால்
கொழுப்பு தானே குறையும்
துணையாள் தானே குழைவாள்
இங்கிலாந்தின் முத்தம்
இம்சிக்கும் முத்தம்
அமெரிக்காவின் முத்தம்
அழுப்புத்தட்டும் முத்தம்
இந்தியாவில் மட்டும்தான் இனிக்கும் முத்தமென்று இதிகாசங்கள் சொல்லுதே
அரும்பும் காதலில்
அவசர முத்தம்
விரும்பும் காதலில்
குறும்பான முத்தம்
அனுபவக் காதலில்
அழகான முத்தம்
கள்ளக் காதலில்
காமம்தானே முத்தம்
நல்ல காதலில்
காமத்தில்தான் முத்தம்
முதுமை காதலில்
முத்தான முத்தம்
முதிர்ந்தும் இனிக்கும்
அந்த உரிமையான முத்தம்
காதலின் சேர்வில்
சுகமான முத்தம்
காதலின் பிரிவில்
சோகமான முத்தம்
அட முத்தத்தின் தத்துவம்
சொல்கிறேன் கேளடா
முத்தத்தில் மட்டும்தான்
வாங்கினால்
கொடுக்கத் தோன்றும்
கொடுத்தால்
வாங்கத் தோன்றும்
கேட்காமலே வட்டி கொடுக்கத் தோன்றும்
மொத்தத்தில் முத்தம்
முக்திபெறும் திறவுகோலடா
திறந்துதான் நீபாருடா