கலாமிற்கு சலாம்

பாரத தாயின் தவப்புதல்வன்;

ஏழையாய் பிறந்தவன்;

கலத்தில் சிறந்தவன்;

விண்கலத்தின் நாயகன்;

குடியரசை ஆண்டவன்;

எளிமையாய் வாழ்ந்தவன்;

தமிழுக்கு பெருமை சேர்த்தவன் - தமிழனாய்

தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவன்;

இளைங்கர்களின் முன்னோடியாய்,

இதயத்தில் வாழ்ந்தவன்;

மாற்றம் தந்தவனுக்கு,

ஏனிந்த தாடுமாற்றமோ???

அக்னி சிறகுகளை தந்தவன்,

தன் சிறகுகளை அடக்கிகொண்டானே!

கனவு காண சொன்னவன்,

நிரந்தரமாக உறங்குகிறானே!

சூரியனை மறைக்க முடியுமா?

கடலலைகளை நிறுத்தமுடியுமா?

மண்ணின் மைந்தன் மறைந்தாலும்,

நிரந்தரமாக உறங்கினாலும்,

ஒளி வீசிக்கொண்டே இருப்பான் - எங்கள்

நினைவலையில் தவழ்ந்துகொண்டே இருப்பான்;

அயராது உழைத்தவனுக்கு,

ஓய்வை மறந்தவனுக்கு,

இந்த ஓய்வு தேவைதான்;

உறங்கட்டும் விட்டு விடுங்கள்;

காலம் கலாமை மறைத்தாலும்,

ஞாலம் கலாமை மறவாது!!!

(நீ அமைத்த பாதையில் நாங்கள் பயணிப்போம்;
வல்லரசு இந்தியாவை நோக்கி!!!)

எழுதியவர் : செந்தில் லோகு மா (30-Jul-15, 7:34 pm)
சேர்த்தது : செந்தில் லோகு
பார்வை : 4525

மேலே