இதயம் புழுவாய்த்துடிக்கின்றது.........

நீயே வேறொருத்தவனை நினைத்தபின்
நான் உன் நிழல்மேல் ஆசைபடுவது தவறன்றோ..
என்னையே நான் வெறுக்கத்தொடங்கினேன்
எண்ணங்களை மறக்கத்தொடங்கினேன்
என் ஆசைகள் அனைத்தும் நிராசைகள் ஆகின
என் கனவுகள் என் கண்களை போல் கலங்கின
உன்னை நினைத்த இந்த மனதில்
உணர்வு என்னும் வார்த்தை மடிந்தது
என் இதயம் புழுவாய்த்துடிக்கின்றது
இதற்க்குமேல் தாங்க என்னால் முடியாது
என்னை சீக்கிரம் எடுக்க சொல்லி
எமனுக்கும் இறைவனுக்கும் மனு அனுப்பினேன்
அதை ஏற்று வருவார்கள் என்று நானும்
காத்திருந்தேன் எல்லோரும் போல
அவர்களும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்
என்னைத் தனிமையிலேயே தவிக்க விட்டுவிட்டார்களே
இறைவா நான் என்ன செய்வேன்.........!!!

எழுதியவர் : ரெங்கா (20-May-11, 1:37 pm)
சேர்த்தது : renga
பார்வை : 697

மேலே