நம்மால் முடியும்

பிறக்கும் போது நாம் எல்லோரும்
ஏழ்மை நிலையில் பிறக்கிறோம்
வளர்க்கும் போது சிலர்
வசதியான நிலையில் வளர்க்கப் படுகிறோம்
சிலர் ஏழ்மை நிலையில் வளர்க்கப் படுகிறோம்
குழந்தை என்றால் ஏழை பணக்காரன்
வேறுபாடின்றி பிறப்பது இறைவன் செயல்
எல்லோரும் ஒரே ஜாதி ஒரே மதம்
என்பதன் நோக்கம் படைப்பின் நியதியே
பிறக்கும் போது எதையும் கொண்டு வந்தவரில்லை
போகும் போது கொண்டு செல்வதற்கு
அதை புரிந்து கொள்ளாத நிலையில் நாம்,
புரிந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி
உலகம் நம்மால் ஆளப்பட வேண்டும்
அதை நாம் அனுபவிக்க வேண்டும்
இன்றைய வாழ்வில் நம் கண் முன்னே கண்டோம்
அதற்கு உதாரண புருஷராக ' அப்துல் கலாமை'
அவரை, அவர் அறிவை, அன்பை, கடமையை, நேர்மையை,
தாழ்மையை, எளிமையை ,ஊக்கத்தை, உத்வேகத்தை,
கற்றுக் கொடுக்கும் பண்பை, புரிய வைக்கும் முறைமையை ,
நல்லெண்ணங்களை, நல்ல குறிக்கோள்களை,
நாடே போற்றும் உயரிய சிந்தனைகளை .]

குழந்தைகள், இளஞர்கள், முதியவர்கள்,
ஒவ்வொருவராலும் ஏற்றக் கொள்ளப் பட்ட
அந்த மாமனிதன் விட்டுச் சென்ற
கனவுகளை நிறைவாக்குவோம்
சுயநலமிக்க வாழ்கையின் நடுவிலே
இப்படியும் ஒரு நல்ல மனிதன்
இது ஒன்றே போதும் இனி நாம் நம் குறைகளை
திருத்தி திருந்தி வாழ்வதற்கு
ஏழை பணக்காரன் சாதி மத வேறுபாடின்றி
வாழ முடியும் ,வாழ்ந்து காட்டுவோம்
,நம்மால் எல்லாம் முடியும்
நம்பிக்கை ஓன்று மட்டும் நம் ஆயுதம் பலம்
ஒற்றுமை காண்பின் வேற்றுமை அழியும்
ஓன்று பட்ட இந்தியாவை
வல்லரசாக வெகு விரைவில் காண்போம்

எழுதியவர் : பாத்திமா மலர் (1-Aug-15, 4:09 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : nammaal mudiyum
பார்வை : 413

மேலே