நண்பர்கள் தினம்
என்னை மட்டுமே அறிந்தவன் – என்
நண்பன் என்னை மட்டுமே புரிந்தவன்
பள்ளி நாட்கள் எங்கள் உறவின் தொடக்கம்
அன்பு எங்களை ஆழமாக புரிய வைத்தது
நதி மூலம் அறியாத ஒரு உதயம் –இன்னும்
உரிமையோடு உறவாக கை கோர்த்து
நண்பன் இந்த மூச்சுகாற்று எங்களின் சுவாசம்
“மச்சான்” என்ற வார்த்தை எங்கள் மந்திரம்
கல்லூரி வாசல் எங்கள் உறவுக்கு பாலம்
எங்கள் அறிவை கற்று தந்த பாடசாலை
கற்ற கல்வியும் பெற்ற நண்பர்கள் மட்டுமே
அன்று எங்கள் நட்புக்கு ஆதாரம்
வானம்பாடியாய் பாடி திரிந்த காலம் – நீங்கா
பசுமை நினைவாக எங்கள் நெஞ்சில் இன்றும்
வேலை நோக்கி பயணம் தூர தேசமானாலும்
நம் உறவும் அன்பும் என்றும் மாறாது நிலையாக
நண்பன் !
நான் சுவாசிக்க விரும்பும் காற்று உறவாக
மாறாமல் எங்கள் நினவு இருக்கும் வரை ,,,,,,,,
கவிஞர்: இறைநேசன்.