குடி குடி குடி - பாடல்
![](https://eluthu.com/images/loading.gif)
குடி குடி குடி
உன் குடிய கெடுக்கும்
குடி!
முழி முழி முழி
இத அறிஞ்சு நீயும்
முழி
வாங்குற தொழிலாளி
குடிச்சுப்புட்டு
கிடக்குறான் டா
ரோட்டுல
ஒவரா
குடிச்சுப்புட்டு
கிடக்குறான் டா
ரோட்டுல!
விக்குற முதலாளி
வித்துப்புட்டு
தூங்குறான் டா
வீட்டுல
வித்துப்புட்டு
நிம்மதியா
தூங்குறான் டா
வீட்டுல!!
(குடி குடி குடி)
சாராயம் விக்குற
முதலாளிக்கு
வாங்குன கடன்
இலவசம்
மொத்தமா
வாங்குன கடன்
இலவசம்!
அத வாங்கி
குடிக்கிற தொழிலாளி
உனக்கு...
புத்து நோய்
தான் டா
இலவசம்!!
(குடி குடி குடி)