நீயும் உன் நினைவுகளும்

அதிகாலை கண் விழித்து
அழும் குழந்தையாய்
என் மனம் !

குடை சாய்ந்து கிடக்கிறேன்
நெடுஞ்சாலைப் பயணத்தில்
நான் மட்டும் பேருந்தினுள் !

விபத்தை பார்த்தும் பயணிக்கும்
பயணியாய்
நீயும் உன் நினைவுகளும் !

எழுதியவர் : முகில் (4-Aug-15, 7:12 am)
பார்வை : 122

மேலே