இருக்கலாம்

இந்த நொடியில்..
பலர் லஞ்சம் வாங்கி கையெழுத்துகள்
போட்டபடி அலுவலகத்தில்
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கலாம்..

இந்த நொடியில்..
சிலர் பெற்றவர்கள் மனதை
புண்படச் செய்து கொண்டிருக்கலாம்..

இந்த நொடியில்..
சிலர் ஏமாளிகள் சிலர் தலையில்
சன்னமாக மிளகாய்த்தூள்
அரைத்துக் கொண்டிருக்கலாம்..


ஆனாலும்..
பலர் இந்த நொடியில்
மனசாட்சியோடு..
மனிதத்தை கைக் கொண்டு
மேற்சொன்னவர்களால்
தடைபட்டுக் கொண்டிருந்த
பூமியின் சுழற்சியை..
தொடர்ந்து இயக்கியபடி
இங்குமங்கும்
ஓடிக்கொண்டிருக்கலாம்..
அவர்கள்..
தங்களுக்கே தெரியாமல்
..கலாம் வழியில்
போய்க்கொண்டிருப்பவர்களாக..
இருக்கலாம்!

எழுதியவர் : கருணா (4-Aug-15, 3:30 pm)
Tanglish : irukkalaam
பார்வை : 614

மேலே