என் இக்கவிதையே போதுமடி

உன் விழியே போதுமடி
.....கயிறுகள் வேண்டாம்
என்னை கட்டி இழுக்க !!

உன் இதழே போதுமடி
.....குறல்கள் வேண்டாம்
நான் மனதில் இறுத்த !!

உன் சிகையே போதுமடி
.....இருள்கள் வேண்டாம்
என்னை மிரட்டி வைக்க !!

உன் நடையே போதுமடி
.....மதுக்கள் வேண்டாம்
நான் மயங்கி கிடக்க !!

உன் ஸ்பரிசமே போதுமடி
.....தாலாட்டு வேண்டாம்
என்னை உறங்க வைக்க !!

உன் வெட்கமே போதுமடி
.....தெய்வங்கள் வேண்டாம்
நான் தொழுது இருக்க !!

உன் துணையே போதுமடி
.....தமிழ்கூட வேண்டாம்
என்னை வாழ வைக்க !!

என் இக்கவிதையே போதுமடி
.....மௌனங்கள் வேண்டாம்
என்னை நீ வந்து அணைக்க !!!

எழுதியவர் : முரா கணபதி (6-Aug-15, 12:27 pm)
பார்வை : 564

மேலே