ஓம் ஸ்ரீ சாய் ராம்

சாயே சரணம் -ஸ்ரீ
சாயே சரணம்
நீயே வரணும் -துணை
நீயே வரணும்
பக்தன் நான் உனை
நாடி வந்தேனே
நித்தம் உன்னைக்கான
ஓடி வந்தேனே ...
தாயாகி குறைதீருகும்
எங்கள் தேவா
மக்கள் மன இருள் போக்க
மகேசனே நீ வா வா .....
சாயே சரணம் -ஸ்ரீ
சாயே சரணம்
பொருளோடு புகழ் கேட்க்கும்
பக்தனில்லை -சாயே
உன் அருள் மட்டும் வேண்டும்
அது போதுமே ....!!
நான் செய்த பாவம் -அதை
யார் போக்க கூடும் ?
உன் திருவடி தொட்டால்-அவை
யாவும் விலகி ஓடும் ..!
சாயே
கருணை வடிவில்
அனைவர்க்கும் நீ தாயே ..!!
நினைத்தாலே போதும்
கஷ்டங்களை போக்கும்
கலியுலக தெய்வம் நீயே ..!!
அடியேன் எய்த பிறவிப்பலன்
உன்னை துதி பாடி கிடப்பதே ,
இவன் செல்லும் வாழ்க்கை
பாதையின் குரு நீயே ..
இப்பூவுலகம் விட்டு
உன் அடி சேர துடிக்கும்
இவன் என்றும் உனது சேயே...
என்றும்....என்றென்றும்..
ஜீவன்