கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்

முன்குறிப்பு:நான் தளத்தில் பதிவு செய்யும் நூறாவது கவிதை இது.உங்கள் அன்பால் தான் நானும் என்னவோ எழுதினாலும் கவிதை என்று என்னை ஊக்கப்படும் என் நண்பர்களுக்கு என் நன்றிகளை எப்படி சொல்வானோ என்று கூட தெரியவில்லை.

செந்தமிழில் சிற்பி கவிஞனானான்.
அக்கம் பக்கம் பித்தனானான்.
'கற்றது தமிழ்'சொல்லிக்கொடுத்தது
ஏழ்மை ஊரார் கஞ்சன் என்பார்கள் .

போட்டி நிறைந்த அகிலத்தில் நேசித்தது
தமிழை மூன்று வேலை உண்ணும் உணவுக்கு
ஒரு வேளை கிடைத்தது.நான் சந்தோசப்படுகிறேன்...,
யாரிடமும் கையேந்தவில்லை என்று.................,

கவிதை 'தா' என்பார்கள்.கொடுத்தால்
கவிதை எங்கே என்பார்கள்.என்னிடம்
பணமில்லைஎன்று நான் நேசித்தவளும்
என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள்.

என் தோள் சாய்ந்த தோழர்களும்
என்னோடு பேசினால் உதவி கேட்டுவிடுவேன்
என்று என்னைக் கண்டாலும் நான் அவர்களிடம்
சென்றாலும் என்னை அறியமாட்டார்கள்.

என் பெற்றோரை தாங்கும் வயதிலும்
என்னை தாங்கினார்கள்.உடன் பிறந்தோர்
என்னைக் கண்டால் முகம் திரும்பி
பேசமாட்டார்கள்.என்னிடம் செல்வமில்லாததால்.......,

விண்ணினை படைத்து வேண்மேகத்தை
பூக்கச் செய்து மேகங்களுக்குள் தண்ணீர்
கொடுத்து அழகு பார்க்க செய்ததும்
கவிஞனின் கவி வரிகளே........!!!!!!!

நாள் பூரா கவியோடு புலம்புகிறேன்.என்
நெஞ்சின் காயத்தை வரைகின்றேன்.
நான் இறப்பதற்கு முன் என் அம்மாவுக்கு
ஒரு பட்டுச்சேலையும் என் அப்பாவுக்கு
வேட்டியும் வாங்கிக் கொடுக்க ஆசை...!!

கடலைகள் ஓய்வதில்லை.அதே போல்
என் முயற்சியும் முடங்கிப்போகாது.நிச்சயம்
இன்று இல்லாவிட்டாலும் எனக்கென
விடியும் அந்நாளில் என் பெயரோடு கவிஞன்
பட்டம் சேரும்.நான் இறந்தாலும் என்
கல்லறையில் சந்தோசப்பட்டுக் கொள்வேன்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (7-Aug-15, 9:23 am)
பார்வை : 108

மேலே