அப்துல் கலாம்
அன்றொரு வியாழக்கிழமையில்
புனிதத்தாயின் கருவறையிலிருந்து
பூமித்தாயின் மடியில் தவழ வந்தாய்
இன்று அதே வியாழக்கிழமையில்
பூமித்தாயின் கருவறைக்குள்
செல்லப்பிள்ளையாய் சென்றுவிட்டாய்
தன்னம்பிக்கையின் தலைவன் நீ
தரணியில் வந்துதித்த
விஞ்ஞானத்தின் தலைமகன் நீ
இயற்கையை காக்க வந்த இறைவன் நீ
பலர் இதயத்தை தட்டி எழுப்பிய இமயம் நீ
இந்தியா வல்லரசாக கனவு கண்டதும் நீ
அதனை நனவாக்க அக்னி சிறகு விரித்து பறந்ததும் நீ
இனி வல்லரசாகப்போகும் இந்தியாவின் விதை நீ
புனிதரே
உன் பாதத்தின் பயணம்
நின்றுபோயிருக்கலாம்
புதிய இந்தியாவின்
பயணத்திற்கு என்றுமே
உன்பெயர்தான் கலாம்
கலாம் உம் வருகைக்காய்
என்றுமே இவ்வுலகம் சொல்லும் சலாம்