மலட்டு கனவுகள்

எதிர்கால கனவுகள் எத்தனைகளோடு
இன்பச்சுமையின் இன்னல்களோடு
ஈரைந்து மாதங்களின் இறுதியில்
ஓர் இன்பமான வலி .

ஆர்வத்தின் மிகுதியால்
அளவுகடந்த வலியின் ஆழமும் அறியாமல் ,
கண்களின் பார்வை மட்டும்
கர்ப்ப கூடாரத்தை நோக்கியே .

ஆணோ பெண்ணோ
கருப்போ சிகப்போ என்று எதுவும் விலங்காமலிருந்தும்,
உறவுதூற்றல்களை ஒதுக்கிவைக்க ஓர் உறவுதேடலில்
பளீர் அழுகையுடன் ஓர் உருவம் பச்சிளம் பிறப்பு .

அசைவுகளை மட்டும் ரசித்திருந்த
அந்த நாட்களை கடந்து
இதோ அந்த அழகையும் அசைவையும்
இன்பமாய் தொட்டு ரசிக்கிறது கைகள் ..

மசக்கையின் மயக்கம் தாண்டி
இதோ புதியதாய் ஒரு மறு பிறப்பில்
உலகத்தை அதிசயமாய் உணரும் தருணத்தில்
தாய்மை என்னும் அங்கீகாரம் ..............

தியாகங்களை மட்டும் நிரந்தரமாக்கி
சுயநலத்தை துறந்து
வயிற்றிற்கும் வஞ்சனை செய்து
கரு தரிக்கிறது கருணையின் ஆசை .............

ஆறத்தழுவி அன்பாய் முத்தமிட்டு
சாதனையின் உச்சத்தை தொட்டதாய்
உணர்ச்சி பொங்கலில்
ஓர் ஆனந்த கண்ணீர் பெருவெள்ளம் .........

அதற்குள் கனவுகள் களைந்துவிட
விழித்துக்கொள்கிறாள் மலத்டு தாய் .

கடவுளின் துரோகத்தால்
காலத்திற்கும் கனவில் மட்டுமே
தாய்மை தரிக்கிறது .

காயங்களின் வலி
அனுபவிப்பவர்களுக்குதான் தெரியும் -
உடலால் மலடுகள் ஒரு சிலர்தான் -
ஆனால் உள்ளத்தால் ?

அடுத்தவர்களில் உன்னைவைத்து பார்
வேதனைகளின் வேகம் உணர்வாய்
எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை -
உணர்தலே மனிதத்தின் அடிப்படை .

எழுதியவர் : வினாயகமுருகன் (10-Aug-15, 8:57 am)
Tanglish : malattu kanavugal
பார்வை : 156

மேலே