இயற்கையின் சீற்றம்
இயற்கையின் சீற்றம்!
பனிப்பாளங்கள் உடைந்து
கடலில் கலந்து உருகி கரைய,
கடலோட்டங்கள் பாதிக்கப்பட்டு,
வெட்ப, தட்ப நிலைகள் மாற,
மழை பொழியா நிலங்கள் வெடித்து,
பயிர்கள் எரிந்து, உழவர்கள் மடிய,
கடும் புயல்கள், வேக வெள்ளங்களென,
இயற்கை சினம் கொண்டு,
சீற்ற்முடன் பரைந்துரைத்தாலும்,
அறவே அவற்றை புறக்கணித்து நாமும்,
அழியும் பாதையில் மேலும் விரைகிறோம்;
நில எண்ணெய், கரி போன்ற,
புவியளித்த பொக்கிஷங்களை,
பேராசையுடன் தோண்டியெரித்து,
உலகைக் காக்க இயற்கை அளித்த,
‘ஓஜோன்’ எனும் கேடயத்தை தகர்த்து,
உலகமே அவதியுரும் நிலைக்கு வந்தும்,
சீரமைக்கும் முயற்சியில் துரிதம் காட்டாமல்,
மனித குலத்திர்க்கு குழி நாம் பறிக்கிறோம்.
இனப்பெருக்கத்தை செவ்வனே அடக்கி,
இயற்கையின்பால் நாமும் நோக்கினால்,
அடுத்தடுத்து இனிவந்திடும் மனிதகுலம்,
மனமார நம்மை வாழ்த்திப் போற்றிடுமே!
சம்பத்