காலி மனைகள்
பூட்டிய கதவு பூட்டிக்கிடக்க
என்றோ வரும் தபாலைத் தவிர
வேறொன்றும் தெரியாது
பக்கத்து வீடு பற்றி...
அயல் நாட்டிலே வேலை செய்து
சொந்த ஊரிலே ஒரு வீட்டை வாங்கி
அதைப் பூட்டி வைத்து தூசி படர
துல்லியமாய் காசு சேர்ப்பார்...
வீடில்லாத ஏழை இங்கு
வீதி ஓரமாய் கிடக்கையிலே
வீணாய்ப் போன சொந்தங்களுக்காக
வீட்டைக் கட்டி அழுகின்றார்...
சேர்த்த சொத்தை சிறிது கொடுத்து
சேர்த்துக் கொண்டால் புண்ணியத்தை
சோர்ந்த உள்ளம் சோறு உண்ணும்
சொல்லும் பேரை எந்நாளும்...