செல் போன் சிணுங்கல்கள்
சிணுங்குவது செல் போனா?
என் செல்லமே செல் போனில் சிலருக்கு...
ஏண்டா போன் வருதுன்னு பலருக்கு...
என்னடா என்ன விஷயம் என்றால்...
விஷயம் இருந்தால் தான் பேசுவியா? கேள்வி...
சரி, ஏதாவது பேசேன்னு சொல்லி
போன் தள்ளி வைத்து உளறவிட்டால்...
இப்போ என்ன சொன்னேன், திருப்பிச் சொல்லுன்னு ஒரே நச்சு...
அதைத் தானே சொல்லிட்டு இருந்தேன்னு
அளந்து விடணும் சமயத்தில் ...
இப்படியே போனால் செல் சுவிட்ச் ஆப் தான்...
ஆனால் வருகிறது மேசேஜெஸ் கூடை கூடையாய்...
ஐயோ ராமா, சொரணை கெட்டுப்போச்சோ?
செல் போனே பெரும் தொல்லை...