நீ மட்டும் வேணுமடா

[7:16PM, 21/07/2015] dhamayandhik: கரைசேர்த்த அலையே,
புது உலகினை உன்னால் கண்டேன்.
மதுஅருந்திய வண்டென நின்றேன்.
ஊரே என்னை கடவுளாய் பார்க்க..
உள்ளுக்குள் கோடி ஆசைகள் பூக்க...
விழியில் நீர்த்துளி அருவியாய் வார்க்க..
உன்னிடம் சொல்லி என்வலி தீர்க்க..
செல்லமே எனை கூட்டி வந்தாய்..
துள்ளும் கயலாய் நான் மாறகண்டாய்.
என் கனவுகள் எல்லாம் நடக்கவேண்டும்.
நாம் கரம்பற்றி காற்றில் மிதக்க வேண்டும்.
கார்முகில் நீராய் நான் மாறவேண்டும்.
சேருக்குள் வேராய் நாம் சேரவேண்டும்.
சிறைபட்ட சிறுபறவை கரை தாண்ட பார்க்குது.
அரைவிட்டு வெளியேறி உன் அன்பை கேக்குது..
தலையாட்டும் பூப்போலே தாலாட்டு பாடி,
வாழ்வோம் வா நெஞ்சே காலங்கள் கோடி.
உன் பார்வையிலே என் வலிகளை தொலைத்தேன்.
உனை சேர்ந்திடவே இரு கரம் கொண்டு அழைத்தேன்.
என் இளமையின் இரகசியம் உன்னிடமே கசியும்.
என்னடா செய்தாய் எனக்கு நீ வசியம்.
கடிகாரமுள்ளாய் மனம் உனை சுற்றுதே...
கடிவாளம்இல்லாமல் உயிர் உனை பற்றுதே..
மீட்டெடுத்த எனை நீ வீனையாய் மீட்டிடு..
காதல் சுகங்களை கண்ணா நீ காட்டிடு....

கு.தமயந்தி

எழுதியவர் : கு.தமயந்தி (11-Aug-15, 8:37 pm)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 63

மேலே