தங்க மகன்

தமிழன் இல்லாத தேசமில்லை
தோழன் இல்லாத தமிழனும் இல்லை
தங்கமே தமிழன் மனம்
மவுனமே அவன் மொழி
தமிழை எவர் கொச்சைப் படுத்தினாலும்
தமிழனை எவர் காயப்படுத்தினாலும்
பொறுமையை இழப்பான் பூகம்பமாய் ,
பண்போடும் காப்பான் அமைதியாக
நம் நாவினில் ஆடிடும் தமிழாலே
இனிமையும் இன்பமும் சேர்ந்துவரும்
அன்பும் வளமும் கொள்ள வரும்
நல்லவர் நாவினில் தவழ்ந்தும் வரும்.
நாணயம் மிக்க, நறுமணம் கொண்ட
நற்றமிழ் நமது மொழியாகும்.
தாய் கொண்ட நம் தமிழ்
மழலை என தவழுது நம் தாய் நாட்டில்,
தங்கம் என மின்னுது தமிழன் என்றே
தமிழின் பெருமை உணர்ந்து விட்டால்
தமிழன் பெயரோ தங்க மகன்

எழுதியவர் : பாத்திமா மலர் (11-Aug-15, 10:55 pm)
Tanglish : thanga magan
பார்வை : 113

மேலே