காலைப் பொழுது

அதிகாலை 5 மணி,

தாயின் கருவறையில் இருந்து
குழந்தை பிறசவிப்பது போல,
இரவின் கருவறையில் இருந்து
பகல் பிறசவித்துக் கொண்டிருந்தது!!

சூரியன் ஒருபுறம்
விழிக்க காத்திருந்தான்,
சந்திரன் மறுபுறம்
உறங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்!!

ஏனோ என் மனம்
என்னவள் நினைவில்
கனவு உலகில் கால் பதிக்கிறது!

இப்படித்தான் விடிகிறது,
என் எல்லா காலைப் பொழுதும்!!!

எழுதியவர் : தமிழரசன் (13-Aug-15, 1:43 pm)
பார்வை : 132

மேலே