பெண்களுக்கு சுதந்திரமில்லை

சுதந்திரம் இல்லை சுதந்திரம் இல்லையே...
பெண்கள்
சிற்றுந்திலும் பேருந்திலும் செல்ல சுதந்திரம் இல்லையே..!
பாதுகாப்பு இல்லை பாதுகாப்பு இல்லையே...
பெண்கள்
பகலிலும் இரவிலும் நடந்துசெல்ல கூட பாதுகாப்பு
இல்லையே..!
வீட்டின் வறுமைக்காக வேலைக்கு செல்கிறாள்... திரும்பி
வீடு வந்து சேருவாளா என பெற்றவள்
காத்திருக்கிறாள்..!
பயிர்களுக்கு வேலி பாதுகாப்பாக இருக்கிறதே...
பள்ளிக்கு செல்லும் பெண்களுக்கு இன்றைய
காலத்தில் பாதுகாப்பே இல்லையே..!