ஏழையின் முகவரி
விந்தையான் உலகம் தந்த பரிசு நான்
வீதியின் ஓரங்களே என் வீடுகள்
ஊமை பாஷைகள் எனக்குண்டு
உறவுகளின்றி உறங்கும் விழிகள் இரண்டு
நிலவு தரும் வெளிச்சம் என் விளக்கு
நீல வானம் என் போர்வை
எறும்புக்கும் நுளம்புக்கும் தோழன் நான்
நினைத்தால் வரும் கன்னத்தில் வரும் ஈரம் தான்
பார்ப்போரின்றி பாதையில் போகும் பாதங்கள் பல விதம்
கேட்போறின்றி இந்த உடல் உலா வரும் வீதியிலின்று
இந்த ஏழையின் முகவரி எங்கே
தேடுகிறேன்
தேடிக்கொண்டே இருக்கிறேன்.