மனிதரின் குணம்
மனிதரின் குணம்நே ரத்திற்(கு) ஏற்றபடி
இனியும் வேறு படுமாம்; ஒருவரைத்
'தூண்டித் துருவிக்' கேட்டால், பின்னணியில்
வேண்டிய உண்மைகள் சிலவெளி வருமே! 1
ஒவ்வொரு 'அற்புதத் தின்'பின் னணியில்
எவ்வாறு சிறிதள வாவத றிந்து
கொள்ளும் ஆர்வம் இருக்குமோ அறிந்து
கொள்ள முயற்சிப் பதுதவ றன்றே! 2
'எனக்குமே தெரியவே தெரியா தென்றவர்
சொன்னால் பின்னணி யிலவருக் குமேதோ
கொஞ்சம் தெரிந்திருக் கிறது; இன்னும்
கொஞ்சம் தெரிவதில் தவறொன் றில்லையே! 3
'நான்கவ லைப்படப் போவ தில்லை'
என்றொரு வர்சொன் னால்பின் னணியிலே
உணர்ச்சிக் கொந்தளிப் புடன்மனி தகுணமும்
நேரத் திற்கேற் றபடிவே றுபடுமே! 4