துரோக கோடாரிகள்

அடுத்தவர் அழிவும்
சுயநல வாழ்வும்
மனிதனின் சமுதாய
சம்பிரதாயங்கள் ஆகிவிட்டது !

துரோகமும் ஏற்றுக்கொள்ளகூடியதாகவே
இருக்கிறது
தன்னுடைய நலனுக்கு மட்டும் !

பேச்சு சுதந்திரத்தின் வீரியம்
தெரிந்த மனித இனத்திற்கு
சூழ்ச்சி சுதந்திரத்தின் வலி புரியவில்லை !

திரும்ப திரும்ப செய்த தவற்றையே செய்து
மனிதனை மனிதனே வதைக்கிறான்
துரோகத்தால் !

எடுத்து சொல்பவர்களை
ஏளன வார்த்தைகள்
மூடி மொழுப்புவதுதான் வாடிக்கை !

பேச்சில் நீதியும்
செயலில் அநீதியும்
மனிதனின் இரு பக்கங்கள் !

மரத்தின் மரணத்தை
மரத்தின் கைப்பிடித்தான் தீர்மானிக்கிறது -
இது மனிதனுக்கும் பொருந்தும் !

ஆயிரம் காரணங்கள் கூறினாலும்
துரோகத்திற்கான நியாயத்தை
ஏற்றுக்கொள்வதில்லை
இறைவனின் நீதி !

எழுதியவர் : வினாயகமுருகன் (22-Aug-15, 11:44 am)
பார்வை : 108

மேலே