கம்சர்களின் ராமன்

காணி நிலம் இன்றி ஓராயிரம் ராமர்கள்,
ஒருவேளை உணவின்றி தெருவேங்கும் லாவகுசர்கள்,
பாதுகாப்பு சிறிதும் இன்றி பல்லாயிரம் சீதைகள்,
வாழ வழி இன்றி இந்த நாடெங்கும் நிறைந்திருக்க,
கம்சர்களின் வாய் வழியாய் - ராமன் ஏனோ,
அவன் கோவிலுக்காய் மட்டும் பாடுபடுகிறானே ?

எழுதியவர் : பரணி (26-Aug-15, 2:08 pm)
பார்வை : 702

மேலே