காலங்களில் அவளோடு நான்

இளவேனிலில்
உன் இளமை கூடுவதால்,
முதுவேனிலில்
என் முதுமை குறைகிறது!
காரில் நம்மை
நனைக்கும் மழையானது
நம் கூடல் கண்டு
வெட்கம் கொண்டு
மின்னலை மினுக்கச் செய்கிறது!
முன்பனியும் பின்பனியும்
என் மேல் பொறாமை
கொள்கின்றன...
அவைகளுக்கு கிட்டாத
உன் முச்சுக்காற்று
எனக்கான கதகதப்பாய்
கிட்டுவதால்!
காலங்கள் ஒவ்வொன்றும்
இனியவை.
காலங்களில் உன் அருகாமை,
இனிப்பை இரட்டிப்பாக்குகிறது!
என்
காலம் முழுவதும்
இவ்வாறு முடியவே
ஆசைக் கொள்கிறேன்.
பேராசை எனத்
தெரிந்தும்!