கவிதையும் காதலும் - 2
கண்ணொடு கண்ணினை நோக்கின்
காதல்,
மௌனித்து மொழி உருவெடுத்தல்
கவிதை.
நசித்து நினைந்து நிலைக்கும் பார்வை
உண்டாயின் காதல்
நனையும் நாக்கும் உலர்ந்த உதடும்
உமிழுமாயின் கவிதை.
பதிந்த பார்வையில் பொதிந்த உருவை
உறவாய் உயிராய் நினைந்துருகும்
காதல்;
தெளிந்த கருவை சுமந்து அழகில் தோய்த்து
உணர்வெனும் உடையில் தகிப்பது
கவிதை.
காதலை அணிந்து கவிதை நடையிடும்;
கவிதையின் மறைவில் காதல் கண் சிமிட்டும்.
காதல் நோயுற கவிதை மருந்தாகும்
கவிதை சிகிச்சையில் காதலும் குணமுறும்....
காதல் மூச்சினால் கவிதை பேச்சாகும்,
கவிதை பேதையானால் காதலும் ஜடமாகும்..
காதலுடன் கவிதை வாழ்ந்திடவே
கண் வழி மௌனம் கை எழுத்திடுதே ....