நானும் என் காதலும் -வயசு 13 ---------- 1

மொலச்சி மூனு இல கூட விடல
மொட்ட மாடியில
நெத்தி போட்டு தெறிக்க
எட்டி முத்தம் ஒன்னு வச்சா ...........

அல்லிநகரத்து காரியாம்.......
பேரு அபிநயா
அம்புட்டு அழகு
சுண்டி விட்டா கள்ளி பழச் சாறு
கரப் புரண்டு ஓடுமையா
அவ உதட்டு நீர் வீழ்ச்சியில ............

மின்சாரத்துக்கு பொறந்தவளோ என்னமோ
கன்னி பொண்ணு அவதொடுகையில
மின்மினிப் புச்சிப் போல்
ஏ மொகத்தில் பழுப்பு எரிய
ரோமங்கள் மட்டுமே காவலுக்கு நிற்கும்
என் தேகம் முழுவதும் ஈட்டியாய் ........................

பருத்தி வீரனாய் திரிந்தவனை
பையாவாய் மாற்றியது
உந்தன் ஒற்றைக் கண் பார்வை தானடி
பொய் இல்லை பெண்ணே ....................

ஆயிரம் ஆண்கள் பயின்ற பள்ளியில்
உன் பார்வை என் மேல் மட்டுமே
சூரியன் கூட குளிர ஆரம்பித்தது
உன் பார்வை என் தேகத்தில் பட்டவுடன் ........

வகுப்பு அறையில்
தாஜ்மஹால் பாடம் நடத்தும் பொது
டீச்சர் எதிரி நாட்டு மன்னனாய்
நீயும் நானும்
ஷாஜஹான் , மும்தாஜாய் .................

பூமி மீது சாமியை வந்தாய்
பூக்கள் மீது தேனியாய் வந்தாய்
புரியாத புதிருக்கு விடை தந்தாய்
புன்னகை மலரே என் வாழ்வில் ஒளியாய் வந்தாய்

காலாண்டில் காலாற காதலித்தோம்
அரை யாண்டில் காற்றாக காதலித்தோம்
முழு ஆண்டில் மட்டும் ஏனடி
உயிராய் இருக்க மறந்து விட்டாய்

பருவத்துக்கு வந்தவுடன்
பழகியவன் மறந்து விட்டானோ?
இல்ல பார்த்த முகம் தானே என்று
புது முகம் தேடினாயோ .......................

புரியவில்லை பெண்ணே
நான் தான் புத்தி கெட்ட மடயன்னாயிர்ரே
நல்ல வேலை பள்ளி பருவத்தில்
முகத்தில் தாடி இல்லை -இல்லையென்றால்
இன்று நான் சன்னிய்யாசிரியாகிருப்பேன்...................
- தொடரும் (வயசு 15)
-------------------------------------------------------------------------------------------------------
மடந்தை - ஜெபக்குமார்

எழுதியவர் : மடந்தை -ஜெபக்குமார் (1-Sep-15, 6:24 pm)
பார்வை : 302

மேலே