எங்கே எந்தன் வெண்ணிலா
என் வெண்ணிலா
அன்றிரவு அலைபேசியில் அழைத்து
மேலே சென்று
கரையாமல் நகர்ந்து செல்லும்
முழு பால் நிலவை ரசிக்க சொன்னால்
சென்று காண முயற்சித்தேன்
அது மேகங்களுக்குள் மறைந்து மறைந்து
நகர்த்து சென்று
என்னை காண விடாது ஏமாற்றியது
அத்தருணத்தில் எனக்கு தெரியாது
நிலவை பார்க்க சொன்ன என் வெண்ணிலா
பின்னொரு நாளில் என்னை எம்மாற்றி
பிரிந்து செல்வாள் என்று ??!!!
என்றும் அன்புடன்
முழு நிலவை காணும் பொழுது எல்லாம்
அவள் நினைவில் மிதக்கும்
அவள் அன்பு காதலன்