காதலில் மூர்ச்சை
ஜடமாய் இன்று நான்..
இன்றுடன் முடியுதே
நம் சந்திப்பு..
இனி நீ வேறு நான் வேறு...
மனமுவந்து பிரிந்தாலும்
என்னால் ஏனோ ... என்னுள் ஏதோதோ..
தனித்தனி மலராய் இருந்த நாம் சேர்ந்தோம்,
இத்தனை நாள் காதல் பயணத்தில்
இனிதே பரிணமித்தோம்;
இன்று பிரிக்கையில் பார்க்கிறேன்,
நீ அதே மலர்,
நான் மட்டும் சருகாய் நாராய்
நிறம் மாறி உருமாரி ...
போகட்டும்
உன் அழகு புன்னகை ஒன்றே ஒன்றை பரிசளி ..
காலத்துக்கும் நான் அதை கையில் ஏந்துவேன்,
மழலை கையிலொரு பொம்மையை பார்த்தவண்ணம்..
மீதி காலமும் வாழ்ந்திருப்பேன்...
உன் புன்னகை தானே என் சுவாசம்..
எதிர்நோக்கிய எனக்கு நீ தருவதோ
வெற்று இதழ் விரிப்பு
வேண்டா வெறுப்பாய்
சற்றும் சலனமின்றி
உற்று நோக்கும்
என் விழி ஓரம் சிந்தும் ஈரம்
உனக்கு புரியாது
திறனற்று திராணியற்று
எழுந்து நிற்கவோர் கோலின்றி
எனக்கே நான் சுமையாக
சட்டென
மூர்ச்சை..
எதிர்கொள்ளும் நாளை
உன் மணக்கோலம்;
ஆனால் எனக்கோ.
.... கோலம்?