வாழ்வது உனக்காக மட்டும் நிஜமடி 555

பெண்ணே...

பதினேழு வருட சிறை
வாசத்திற்கு பிறகு...

ஒரு இதய பரிமாறல்
எப்படியோ முடிந்தது...

நான் உன்னை காதலிக்க...

ஏனடி முடியவில்லை
நீ என்னை காதலிக்க...

நேற்று நீ சென்ற
நந்தவனத்தில்...

உன் கரம் படாத பூக்கள் எல்லாம்
தற்கொலை செய்து கொண்டன...

அழுது அழுது இறுதியில்
கல்லறையில் போய் வீழ்ந்தன...

நாளை நானும் அப்படித்தானோ
தெரியவில்லையடி...

உனக்காகவே வாழ்வது
மட்டும் நிஜமடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Sep-15, 8:02 pm)
பார்வை : 1131

மேலே