காதல் என்பது

காதல் என்பது கவிதை போலத்தான்
பலபல கவிதைகள் படைத்துவிடுகிறேனடி
உன் பெயரை எழுதும்போது!

காதல் என்பது ஏமாற்றம்தான்
திட்டமிட்டே தினம்தினம் ஏமாந்து போகிறேன்
நீயா இருக்கும் பட்சத்தில்!

காதல் என்பது சுமைத்தான்
சுமக்க தயாராகிறேன் சுகமான சுமைகளாக உனக்காக!

காதல் என்பது கருவறைதான்
உயிருள்ளவரை உன்னை சுமப்பேனடி
என் இதயமெனும் கருவறையில்!

காதல் என்பது தென்றலை போலத்தான்
கணநேரம் வீசினாலும் கணமாய் வீசுகிறதடி
உன்னால் என் நெஞ்சில்!

காதல் என்பது பனிதுளி போலத்தான்
நொடிக்நொடி உருகி மீண்டும் பனிதுளியாகிறதடி
என் மனம் உன்னால்!

காதல் என்பது மின்னலை போலத்தான்
உன் விழிகளிரண்டும் என்னை தீண்டும் தருணங்களிளெல்லாம்
மின் அதிர்வலைகளடி என் நெஞ்சில்!

காதல் என்பது பூக்களை போலத்தான்
என் சுவாசமெங்கும் உன் வாசம்
வீசசெய்தாயடி என் காதலியே!

எழுதியவர் : priyavathani (2-Sep-15, 9:22 pm)
Tanglish : kaadhal enbathu
பார்வை : 646

மேலே