திருமணமான ஆணும் பெண் தோழியின் நட்பும்
மணமாகி ஆண்டுகள் பல கடந்து
வாழ்க்கை இன்பமாய் ஓடிகொண்டிருக்க
எதேச்சையாக முக நூலில் தன்னுடன் பயின்ற
தோழியை சந்திக்க
மீண்டும் நட்பு துளிர்விட
இருவருக்கும் இடையில் பசுமை நினைவுகள்
பகிர்ந்திட
முக நூலை தொடர்ந்து கைபேசி வாயிலாக
நட்பு தொடர
ஒரு நாள் நள்ளிரவு குறுஞ்செய்தி ஒன்று அவன் கைபேசிக்கு வர
அதை அவன் மனைவி பார்த்து கண்டிக்க
என்னதான் உடன் பயின்ற தோழியாக இருந்தாலும்
இந்நேரத்தில் இப்படி செய்தி அனுப்பலாமா என வினவ
அப்போது தான் அவனுக்கு இது தவறாயிற்றே என்று
புரிந்தது
அன்று முதல் அவன் தோழிக்கு பதில் அனுப்பவில்லை
ஒரு நாள் இரு நாள் ஒரு வாரம் ஒரு மாதம் கடந்தது
நூல் நுழைய ஊசி இடம் கொடுத்தால் தானே
தோழியிடம் இருந்து குறுஞ்செய்தி வருவது நின்றுவிட்டது
இப்போது அவன் மனைவி சந்தோச பட்டாள்
தன் கணவனை அன்புடன் அணைத்துகொண்டாள்
இல்லறம் தென் கூடு போன்றது
அதை நட்பு என்ற பெயரில் நுழைந்து கலைதுவிடகூடது
நட்பு புனிதமானது அதைவிட இல்லறம் புனிதமானது
களங்கம் ஏற்படுத்தும் நட்பை மணமான ஆணும் பெண்ணும்
தொடராது இருப்பதே புனிதமானது
- கோவை உதயன்