கஜல் 16
நாம் இணைந்ததால் நம் வாழ்க்கை ஜொலிக்குது
நம் இருப்பதால் தனிமையே கொதிக்குது
அன்பு என்ற தோர் பாவத்தை கொடுத்திட
நம் மனங்களில் நல் கானம் ஒலிக்குது
யாவரும் சுகம் என்னும் தேன் சுவைத்திட
காதலுள்ளதால் தீமை கொந்தளிக்குது
நம் கதை பெரும் வரலாறாய் விளைந்திட
இன்று வேதனையின் நெஞ்சம் வலிக்குது
காதலிப்பதால் ஞானம் பிறந்திட
பண்பு ஓங்கு மென்னும் கனவே பலிக்குது