அன்புப் பரிசு
அந்த வானொலி பெட்டி
அன்புப் பரிசாக
அது தந்த சுகமோ அமைதியோ
அளவற்றதாக
அண்ணன் கொடுத்ததிந்த
அன்புப் பரிசு
அவள் உறக்கமெல்லாம்
அதன் பாடலூடாக
அண்ணன் கொடுத்ததிந்த
அன்புப் பரிசு
அலை பாயும் எண்ணமெல்லாம்
அமைதியின் நகர்வாக
அண்ணன் கொடுத்ததிந்த
அன்புப் பரிசு
அத்தனையும் பாடலாக
அமுதமென்னும் இனிமையாக
அண்ணன்கொடுத்ததிந்த
அன்புப் பரிசு
அந்த வானொலிப் பெட்டி
அமைதியின் சின்னமாக
அண்ணன் கொடுத்ததிந்த
அன்புப் பரிசு
அன்புக்கோர் தங்கை என்றால்
அவளன்றோ, அவளுக்கு
அண்ணன் கொடுத்ததிந்த
அன்புப் பரிசு
அந்த வானொலியின் பாடல்கள்
அன்பென்னும் கானமாகும்
அண்ணன் கொடுத்ததிந்த
அன்புப் பரிசு
அள்ளித் தரும் நிம்மதியை
அர்த்தமுள்ள பாடல்களால்
அண்ணன் கொடுத்ததிந்த
அன்புப் பரிசு